திருச்செந்தூர் முருகன் கோவில் குடமுழுக்கு நாளை நடைபெற உள்ள நிலையில், கோவிலின் ராஜகோபுரம் அலங்கரிக்கப்பட்ட மின் விளக்குகளால் ஜொலித்தன. 137 அடி உயரம் கொண்ட திருக்கோவிலின் ராஜகோபுரம் வண்ண வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருப்பதை பார்த்து பக்தர்கள் செல்போனில் படம் பிடித்து மகிழ்ந்தனர்.