திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்து டிப்பர் லாரி விபத்துக்குள்ளானது. லாரிக்குள் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஓட்டுநர் செல்வம் என்பவரை, சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.