தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு டிப்பர் லாரி உரிமையாளர்களும், ஓட்டுநர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சை மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குநர் ப்ரியா, கடந்த 2 மாதங்களாக கிராவல் மண் எடுக்க உரிமம் வழங்காமல் அலைக்கழித்து வருவதாகவும், இதனால் 500-க்கும் மேற்பட்ட லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாகவும் குற்றம்சாட்டினர். மேலும், கிராவல் மண் கிடைக்காததால் புதிதாக வீடு கட்டுபவர்கள் பாதிப்பை சந்தித்துள்ளதால், அரசு வழிக்காட்டுதல்படி கிராவல் மண் எடுப்பதற்கு உரிமம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.