திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை அருகே சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தால் சுமார் 2 மணி நேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சொகுசு கார் மீது டிப்பர் லாரி மோதியதில் ஆந்திர மாநிலம் சத்தியவேட்டில் இருந்து சென்னை மார்க்கத்திலும், சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை வழியாக வடமாநிலங்களுக்கு செல்லும் வழித்தடத்திலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.