கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வெங்கமேடு பகுதியில் கிராவல் மண் எடுத்து வந்த டிப்பர் லாரி மோதி 3 மின்கம்பங்கள் உடைந்து விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தரமற்ற முறையில் மின்கம்பங்களை அமைத்ததாக கூறப்படும் நிலையில், டிப்பர் லாரி ஓட்டுநரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.