சாலையில் திடீரென கம்பீரமாக நடந்து வந்த புலி, சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஈர்த்தது. நீலகிரி மாவட்டம், மசினகுடி மாயார் சிங்காரா போன்ற கிராம பகுதிகளுக்கு செல்லக்கூடிய சாலைகள் அடர்ந்த வனப்பகுதியில் உள்ளதால் ஏராளமான வன விலங்குகள் சாலையை கடந்து உலா வருகின்றன. இந்த நிலையில், சிங்காரா நீர்மின் நிலையம் செல்லும் சாலையில், சுற்றுலா பயணிகள் செல்லும் போது வனப்பகுதியில் இருந்து கம்பீரமாக நடந்து வந்த புலி சாலையை கடந்து மறு பகுதிக்கு சென்றது. இதனை சற்றும் எதிர்பார்க்காத சுற்றுலா பயணிகள் புலியை மிக அருகில் பார்த்து பரவசமடைந்தனர். இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.