திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் பகுதியில் 330 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள டைடல் பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 11.14 ஏக்கர் பரப்பளவில், 5.57 லட்சம் சதுர அடியில் 21 மாடிகள் கொண்ட டைடல் பூங்காவை ரிப்பன் வெட்டி முதலமைச்சர் திறந்து வைத்த பின் இரண்டு மென்பொருள் நிறுவனங்களுக்கான தள ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா, நாசர், தாமோ அன்பரசன் மற்றும் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த டைடல் பூங்காவில் 200க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தங்கள் தொழில்நுட்ப நிறுவனங்களை அமைத்துக் கொள்ள முடியும் என்பதால் சுமார் 6000 க்கும் மேற்பட்ட படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.