நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் இடியுடன் கொட்டித்தீர்த்த கனமழையின் காரணமாக மரம் சாய்ந்து சாலையில் விழுந்ததால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக வெளுத்து வாங்கி கனமழையால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பர்லியார் அருகே குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் பெரிய மரம் ஒன்று சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்ததால் இரண்டு ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் செல்லமுடியாமல் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நின்றனர். தகவல் அறிந்து அங்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் சாலையி்ல் சாய்ந்த மரத்தை வெட்டி அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.