புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையில் அடுத்தடுத்த 3 வீடுகளுக்குள் புகுந்த மர்ம நபர்கள் வீட்டினரை தாக்கி 16 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 6 சவரன் தங்க நகைகளை கொள்ளைடியத்து சென்றனர். கந்தர்வக்கோட்டை அருகேயுள்ள முல்லை நகரில் அப்பாஸ் என்பவரின் வீட்டிற்குள் நுழைந்த மர்மநபர்கள் வீட்டிலிருந்த அப்பாஸை தாக்கிவிட்டு 16 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 6 சவரன் தங்க நகைகளை திருடி சென்றனர். இதேபோல் அடுத்தடுத்த 2 வீடுகளுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் அங்கு எதும் கிடைக்காததால் அங்கிருந்து தப்பியோடினர். இச்சம்பவம் அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.