கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே வனக் காவலரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிய மூவரில் ஒருவரை வனத்துறையினர் கைது செய்தனர். வனப்பகுதியில் சட்டவிரோதமாக வேட்டையாட சென்ற செல்லக்கண்ணு, பாலு, சரவணன் ஆகிய 3 பேரை அதிகாரிகள் சுற்றி வளைத்தனர். அப்போது, வனக் காவலர் வேலுமுருகனின் காலில் துப்பாக்கியால் சுட்டுவிட்டு, பாலு மற்றும் சரவணன் தப்பிச் சென்றனர்.