சேலத்தில் மதுபோதையில் உதவி ஆய்வாளரை தாக்கிய சிறப்பு காவல் உதவி ஆய்வாளரின் மகன் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். அமராவதி தெரு டாஸ்மாக் பாரில் மதுபோதையில் இளைஞர்கள் சிலர் தகராறில் ஈடுபட்டதாக அழகாபுரம் காவல்நிலையத்திற்கு தகவல் வந்த நிலையில், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது உதவி ஆய்வாளரை அவர்கள் தாக்கியதில் மயக்கமடைந்த அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.