திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் இரு சக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்ததாக 3 பேரை கைது செய்த போலீஸார், அவர்களிடமிருந்து 4 பைக்குகளை பறிமுதல் செய்தனர். கீழ்புதுப்பாக்கம், பாரி நகர் உள்ளிட்ட இடங்களில் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி திருட்டு போவதாக புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து அப்பகுதியில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.