கோவை அன்னூர் அருகே முன்விரோதம் காரணமாக இளைஞரை மதுபோதையில் தாக்கிய 2 சிறார்கள் உட்பட 3 பேரை போலீஸார் கைது செய்தனர். பொகலூரில் உள்ள மன்னீஸ்வரர் சூப்பர் மார்க்கெட் பழமுதிர் நிலையத்தில் பணிபுரியும் நவீனுக்கும், சபரி என்பவருக்கும் முன்விரோதம் இருந்த நிலையில், 2 சிறார்களை அழைத்துக் கொண்டு சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்று தாக்கினர்.