கோவையில், கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில், மூன்று பேரை காலில் சுட்டுப் போலீசார் பிடித்தனர். விமான நிலையம் அருகே ஆள் அரவமற்ற பகுதியில் காரில் ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவி, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம், தமிழகத்தை அதிர வைத்துள்ளது.அரிவாள் வெட்டில் காயமடைந்த காவலருக்கு சிகிச்சைஇந்த நிலையில், கோவை, துடியலூர் அருகே வெள்ளக்கிணறு பகுதியில் போலீசார் சுற்றி வளைத்த போது, காவலரை அரிவாளால் தாக்கி விட்டு தப்ப முயன்றதால், துப்பாக்கிச் சூடு நடத்தியதாக காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மூவர் தாக்கியதில் படுகாயமடைந்த காவலர் சந்திரசேகர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சொல்லப்படுகிறது. இருவர் சிவகங்கை, ஒருவர் மதுரையை சேர்ந்தவர்கோவை கூட்டுப் பாலியல் வழக்கில் பிடிபட்ட மூன்று பேர் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த கருப்பசாமி, காளீஸ்வரன் மற்றும் மதுரையை சேர்ந்த தவசி ஆகியோர் கட்டட வேலை பார்த்து வந்ததும், மூவர் மீதும் கொலை, வழிப்பறி போன்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிய வந்துள்ளது. இதையும் பாருங்கள் - கோவை கொடூரம், 3 பேரை துளைத்த துப்பாக்கி குண்டு | Coimbatore Airport