சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே புலித்தோலை விற்க முயன்றதாக மூன்று பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். மும்முடி பகுதியில் புலித்தோலை விற்க முயற்சிப்பதாக வந்த தகவலையடுத்து, வனத்துறையினர் அங்கிருந்த Arthiya Towers என்ற தனியார் விடுதியில் பதுங்கியிருந்த பெரியபிள்ளை, ராபின்குமார், மணி ஆகியோரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் புலித்தோலை விற்க முயன்றது தெரியவந்ததையடுத்து, வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மூன்று பேரையும் கைது செய்த வனத்துறையினர், அவர்களிமிருந்து புலித்தோல் மற்றும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.