திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே மூன்று கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதியதில், கார் ஒன்று தீப்பிடித்து எரியும் சிசிடிவி காட்சி வெளியாகியது.தாராபுரம்- ஒட்டன்சத்திரம் புறவழி சாலையில் தாறுமாறாக ஓடிய இனோவா கார், முன்னால் சென்று கொண்டிருந்த இரு கார்கள் மீது மோதியது. இதில் மாருதி 800 காரில் கேஸ் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்ததில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.