தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே ஒன்றன்பின் ஒன்றாக வந்த மூன்று பேருந்துகள் அடுத்தடுத்து மோதிக் கொண்ட விபத்தில், நல்வாய்ப்பாக பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர். ராமநாதபுரம் விலக்கு அருகே இரண்டு தனியார் மற்றும் அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தன. அப்போது அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் ஒன்று, முன்னால் சென்ற தனியார் பேருந்து அருகே சென்றதால், விபத்தை தவிர்க்க பேருந்து ஓட்டுநர் திடீரென பிரேக் பிடித்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது.