ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 2 லாரிகள், ஜேசிபி உள்ளிட்ட வாகனங்களை பறிமுதல் செய்தனர். சயனபுரம் கிராமத்தை சேர்ந்த சிவராஜ், குப்பன் மற்றும் ஆட்டுப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த கேசவன் ஆகிய 3 பேரும் மணல் கடத்தலில் ஈடுபட்டு வசமாக சிக்கினர்.