புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி மீன் மார்க்கெட் மற்றும் சீனி கடை முக்கம் பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த மூவரை போலீசார் கைது செய்தனர். கைதானவர்களிடம் இருந்து 12 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான லாட்டரி சீட்டுகள், 2 செல்போன்கள் மற்றும் 4 ஆயிரம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.