அரியலூர் மாவட்டம் காடுவெட்டியில் திமுகவுக்கு எதிராக முழக்கமிட்ட பாமகவினர் மூவர் கைது செய்யப்பட்டதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜெ.குருவின் பிறந்த நாள் நிகழ்வில் கலந்து கொள்ள அமைச்சர் சி.வ.சங்கர் வந்தபோது, அங்கிருந்த பாமகவினர் திமுக அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பினர்.