கோவையில் தனியார் பள்ளியில் இருந்து காணாமல் போன 10ஆம் வகுப்பு மாணவிகள் 3 பேர், சென்னையில் மீட்கப்பட்டுள்ளனர். பெரிய நாயக்கன்பாளையத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளியில், 10ஆம் வகுப்பு படித்து வரும் மாணவிகள் மூவர் காணாமல்போன நிலையில் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்ததில், மாணவிகள் மூவரும் சென்னையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டனர்.