ராமநாதபுரம் மாவட்டத்தில் கந்து வட்டி விவகாரம் தொடர்பாக கர்ப்பிணியை மிரட்டிய காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். கர்ப்பிணி என்றும் பாராமல், காவலர் கோட்டைச்சாமி மிரட்டிய ஆடியோ குறித்து நியூஸ் தமிழ் தொலைக்காட்சியில் செய்தி வெளியான நிலையில், அவரை மணிமுத்தாறு சிறப்பு பட்டாலியன் கண்காணிப்பாளர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.