கலைஞர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பணி ஆணை வழங்கி ரத்து செய்யப்பட்டதாக புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என முதலமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டு உதவி மையத்தை தொடர்பு கொண்ட இளைஞர், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோரை வெட்டி கொலை செய்யப்போவதாக மிரட்டிய ஆடியோ வெளியாகியுள்ளது.சங்கராபுரம் அருகே தேவபாண்டலம் கிராமத்தை சேர்ந்த சந்தோஷ்குமார், வீடு கட்டுவதற்கான பணி ஆணை ரத்து குறித்து கடந்த மாதம் 11ஆம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கட்டுப்பாட்டு மையத்திற்கு தொடர்பு கொண்ட அவர், ஆட்சியர், எம்எல்ஏ, வட்டார வளர்ச்சி அலுவலரை கொலை செய்தால் என்ன செய்வீர்கள் என கேட்டுள்ளார்.