ஆடி மாத பௌர்ணமியையொட்டி திருவண்ணாமலையில் விடிய விடிய கிரிவலம் மேற்கொண்ட பக்தர்கள், சாமி தரிசனத்திற்காக கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு ஆடி மாத பௌர்ணமியையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்திருந்தனர். கொட்டும் மழையையும் பொருட்படுத்ததாது கிரிவலம் நடத்திய அவர்கள், சாமி தரிசனத்தை முடித்து தங்களது ஊர்களுக்கு திரும்ப ரயில் நிலையத்தில் குவிந்தனர். அப்போது ரயிலில் ஏற முண்டியடித்த பக்தர்கள் கூடுதலாக சிறப்பு ரயில்கள் இயக்க கோரிக்கை விடுத்தனர்.