திருச்சி மாவட்டம் தொட்டியம் மதுரை காளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, போலீஸார் அணிவகுப்பு நடத்தினர். ஏப்ரல் 3-ம் தேதி நடைபெறவுள்ள தேர்த்திருவிழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என்பதால், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.