திருச்சி மாவட்டம் துறையூரில் குட்கா கடத்தி வந்த கார், போலீசாரின் சோதனைக்கு நிற்காமல் சென்ற நிலையில், பொதுமக்கள் அடித்து நொறுக்க முற்பட்டனர். நிற்காமல் சென்ற காரை தடுக்க துறையூர் பாலக்கரை பகுதியில் போலீசார் பேரிகார்டுகளை வைத்தனர். இதனிடையே, குழந்தை கடத்தல் நடப்பதாக தகவல் பரவியதையடுத்து, ஆவேசமடைந்த பொதுமக்கள், அந்த காரை அடித்து நொறுக்க முற்பட்டனர்.