கன்னியாகுமரி மாவட்டம் ஆறுகாணி அருகே, காளான் சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் மயக்கம் அடைந்த நிலையில், மூவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கும்பிக்கல் கடவு பகுதியில் ஏராளமான பழங்குடியின குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், மோகன் காணி என்பவரது வீட்டில் உள்ளவர்கள் காளான் சமைத்து சாப்பிட்டதில் மயக்கம் அடைந்தனர். அதில், மோகன் காணி, அவரது மனைவி, மகன், மருமகள், பேரக்குழந்தைகள் என மொத்தம் 6 பேர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் மோகன் காணி, அவரது மனைவி மற்றும் மகனின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.