உதயநிதி துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டதை பற்றி யாருக்கெல்லாம் வாரிசு இல்லையோ, அவர்கள் பேசலாம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். சென்னை தீவுத்திடல் அருகே தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் மற்றும் சென்னை மாநகர காவல்துறை சார்பில் போதை பொருள் இல்லாத சமூகம் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. 3, 5, 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபெற்ற மாரத்தான் போட்டியை அமைச்சர் ம.சுப்பிரமணியன் கொடியசைத்து துவக்கி வைத்தார். பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் சிறப்பான மாற்றத்தை தந்ததாக தெரிவித்தார்.