கால்நடைகளை திருடினால் குண்டர் சட்டம் பாயும் என திருவாரூர் மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். வடகண்டம் பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் தாம் வளர்த்து வந்த ஆடுகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றதாக புகார் அளித்தார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து முகமது ஆசிப் என்பவரை கைது செய்தனர். இந்த நிலையில், பொதுமக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில், அவர்களின் கால்நடைகளை திருடும் நபர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.