திருவாரூர் மாவட்டத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனை சேர்ந்த 54 பேரை, போலீசார் ஒரே நாளில் அதிரடியாக கைது செய்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருண் கரட் உத்தரவின் படி திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, மன்னார்குடி, நன்னிலம், பேரளம் உட்பட மாவட்டம் முழுவதும் கள்ளச்சந்தையில் மது விற்பவர்கள், வெளி மாநில மது பாட்டில்களை கடத்தி வந்து விற்பனை செய்பவர்கள் குறித்து அதிரடி சோதனை மேற்கொண்ட போலீசார், 54 பேரை அதிரடியாக கைது செய்தனர். மேலும் 1500-க்கும் மேற்பட்ட மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். போலீசாரின் அதிரடி நடவடிக்கைக்கு மாவட்ட எஸ்.பி பாராட்டு தெரிவித்தார்.இதையும் படியுங்கள் : மின்சாரம் தாக்கி உயிரிழந்து கிடந்த கூலித் தொழிலாளி இயற்கை உபாதை கழிக்க சென்ற போது உயிரிழந்த சோகம்..!