திருவாரூர் அருகே கொலை முயற்சி வழக்கில் அதிமுக ஒன்றிய பொருளாளருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 6 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. புதுப்பத்தூர் கிராமத்தில் ஊராட்சிக்கு சொந்தமான குளத்தை பராமரித்து வந்த அதிமுக ஒன்றிய பொருளாளர் நடராஜன், குளத்திற்கு வரி செலுத்தாதது குறித்து தட்டிக்கேட்ட வீரையன் என்பவரை அரிவாளால் வெட்டினார். இந்த கொலை முயற்சி வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் தற்போது தீர்ப்பு வழக்கப்பட்டது.