ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உலையூர் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் திருவள்ளுவர் சிலை மற்றும் ஸ்மார்ட் வகுப்பறையை அமைச்சர் அன்பில் மகேஷ் திறந்து வைத்தார். பின்னர் மாணாக்கர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து பத்தாம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு பரிசுகளும், கேடயங்களும் வழங்கி பாராட்டினார்.