திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவை முன்னிட்டு, கன்னியாகுமரி கடல் உள்ளே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் மணிமண்டபம் மற்றும் கண்ணாடி இழை பாலம் ஆகியவை மின்னொளியில் ஜொலிக்கின்றன. டிசம்பர் 30-ம் தேதி தொடங்கும் வெள்ளி விழா, ஜனவரி 1-ம் தேதி வரை பட்டிமன்றம், கவியரங்கம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் என கோலாகலமாக நடைபெறுகிறது. விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்வதால் கன்னியாகுமரி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.