மதுரை மாவட்டம், மேலூர் அருகே திருவாதவூர் கண்மாயில் நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்று போட்டி போட்டு மீன்பிடித்தனர். அதிகாலையிலோய மீன்பிடி கச்சா, வலை உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களுடன் கண்மாயில் குவிந்த கிராம மக்கள், கட்லா, ரோகு, ஜிலேபி, விரால் என வகை வகையான மீன்களை அள்ளிச் சென்றனர்.