திருத்தணி அரசு மருத்துவமனை, மக்கள் பயன்படுத்தும் வகையில் செயல்படப்போவது எப்போது? என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தரம் உயர்த்தப்பட்ட திருத்தணி அரசு மருத்துவமனையை மக்கள் பயன்படுத்தும் வகையில் இயங்கச் செய்யாமல் தமிழ்நாடு அரசு காலம் தாழ்த்தி வருவதாக கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் மருத்துவ உபகரணங்கள் மற்றும் மின்வசதி இல்லாத காரணத்தால் இன்னும் திறக்கப்படவில்லை என்றும், மக்கள் பயன்பாட்டுக்கு இல்லாத மருத்துவமனை யாருக்காக? எதற்காக? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.