திருப்பரங்குன்றம் கோவில் குடமுழுக்கை ஒட்டி நடைபெறும் யாகசாலை பூஜையில் தமிழ் ஓதுவார்கள் உள்ளனரா? என அடையாளம் காட்டச் சொல்லி தமிழ் வேத பாடசாலை நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. யாகசாலைக்குள் செல்ல முயன்ற தமிழ் வேள்வியாளர்களை கோவில் சிவாச்சாரியார்கள் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.