திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் அதிமுகவினர் மீது புகார் கூறி மதுரை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிக்கையை திரும்ப பெறவில்லை என்றால், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். அமைதி பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு அதிமுக கையெழுத்திடவில்லை என மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிக்கை வெளியிட்டு இருந்தார்.