மதுரை திருமங்கலம் அரசு மருத்துவமனையில் தூய்மை பணியாளர்களை வைத்து சிகிச்சை அளிப்பதாக பொய் செய்தி பரப்பியவர்கள் மீது நடவடிக்கை மற்றும் பணி பாதுகாப்பு கோரி மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அலுவலர்கள் பணிப் புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர். சுமார் ஒரு மணி நேரம் வரை பணிப் புறக்கணிப்பு போராட்டம் நடத்திய மருத்துவமனை ஊழியர்கள், நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தொடர் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர்.