திருக்குறள் ஒரு ஆன்மீக புத்தகம் என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார். முக்தி பற்றி பேசவில்லை எனக்கூறி, சில அரசியல் சிந்தனையாளர்கள் ஆன்மிகத்தில் இருந்து திருக்குறளை பிரிக்க பார்ப்பதாக குற்றம் சாட்டிய அவர், சனாதன தர்மத்தின் மிகப்பெரிய துறவி திருவள்ளுவர் என்றும் விளக்கம் கொடுத்துள்ளார்.