மயிலாடுதுறையை அடுத்த திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கோயில் துலா உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இங்கு காவிரி துலா உற்சவம் கடந்த 7 -ஆம் தேதி கருட கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஒன்பதாம் நாளான இன்று தேரோட்டமும், காவிரி நாலுகால் மண்டபத்தில் கடைமுக தீர்த்தவாரி உற்சவமும் நடைபெற்றது. திருத்தேரில் ஸ்ரீதேவி, பூதேவி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். கோவிந்தா, பரிமள ரங்கநாதா என்ற பக்தி கோஷங்களை எழுப்பியவாறு வடம் பிடித்து தேரை பக்தர்கள் இழுத்தனர்.