திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடலானது சுமார் 100 அடி உள்வாங்கி காணப்பட்டது. பக்தர்கள் அச்சமின்றி புனித நீராடி வருகின்றனர். அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவிலானது கடற்கரை அருகில் அமைந்துள்ளது. இந்த கோவில் கடலானது கடந்த சில மாதங்களாகவே அடிக்கடி கடல் உள்வாங்கி காணப்படும். கடல் மண் அரிப்பும் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஐஐடி தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆய்வு செய்துள்ளனர். இந்த நிலையில் கோவில் கடலானது நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் இருந்து அய்யா வைகுண்டர் அவதார பதிவரை சுமார் 300 மீட்டர் தூரத்திற்கு கரையில் இருந்து கடலானது 100 அடி உள்வாங்கி காணப்பட்டது. கடல் உள்வாங்கியதால் பச்சை நிற பாசிப்படிந்த பாறைகள் வெளியே தெரிந்தது. மேலும் அலைகள் இன்றி கடல் குளம் போல் காட்சியளித்தது. பாறைகள் மீது பக்தர்கள் ஏறி நின்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர். பக்தர்கள் அச்சமின்றி புனித நீர் ஆடி வருகின்றனர்.