தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசி திருவிழாவை ஒட்டி யானை மீது கொடிபட்டம் கட்டப்பட்டு ஊர்வலம் நடைபெற்றது. இரண்டாம் படை வீடான சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கொடியேற்றத்துக்கு முன் யானை தெய்வானை மீது கொடி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக கோயிலை வந்தடைந்தது. கோயிலில் யானைக்கு பக்தர்கள் பழங்கள் கொடுத்து மகிழ்ந்த நிலையில் யானை முழங்கால் இட்டு தும்பிக்கையை தூக்கி வணங்கியதை கண்டும் நெகிழ்ச்சி அடைந்தனர்.