திருச்செந்தூர் முருகன் கோயிலின் குடமுழுக்கு விழா ஜூலை 7 ஆம் தேதியன்று காலை 6.15 மணி முதல் 6.50 மணிக்குள் நடத்தப்படும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. குடமுழுக்கு நேரத்தை இறுதி செய்வது தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் நிலவி வந்தது. குறிப்பாக குடமுழுக்கை நண்பகல் நேரத்தில் நடத்த வேண்டும் என சிலர் வழக்கு தொடர்ந்த நிலையில், குடமுழுக்கு நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.