மயிலாடுதுறையில், பைக்கில் சென்ற டாஸ்மாக் மேற்பார்வையாளரின் கண்ணில் மிளகாய் பொடி தூவி, அவரது மடிக்கணிணியை மர்ம கும்பல் பறித்து சென்றது.பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வரும் ரமேஷ்குமார், கடையை மூடிவிட்டு வீட்டிற்கு தனது பைக்கில் சென்றுள்ளார்.அப்போது, 3 பைக்கில் வந்த 6 பேர் கொண்ட மர்மகும்பல் ஒன்று அவரை வழிமறித்து கண்ணில் மிளகாய் பொடி தூவியுள்ளது.இதில், ரமேஷ் நிலைதடுமாறி பைக்கில் இருந்து கீழே விழுந்த நிலையில், அவரிடமிருந்து மடிக்கணிணி , டாஸ்மாக் கணக்கு புத்தகம் வைத்திருந்த பேக்கை பறித்து கொண்டு மர்மநபர்கள் தப்பி சென்றதாக கூறப்படுகிறது.