திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே மருந்துக் கடையின் பூட்டை உடைத்து 76 ஆயிரம் ரூபாய் பணம், பால் பவுடர் உள்ளிட்டவற்றுடன் கண்காணிப்பு கேமரா ஹார்ட் டிஸ்க்கையும் கொள்ளையடித்து சென்றவனை போலீசார் தேடி வருகின்றனர்.பெதப்பம்பட்டியைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர், தாராபுரம் - பொள்ளாச்சி பிரதான சாலையில் புதுச்சத்திரம் பகுதியில் மருந்துக்கடை வைத்துள்ளார்.பெண் ஊழியர் காலையில் கடையை திறக்க வந்த போது, பூட்டு உடைக்கப்பட்டு ஷட்டர் திறந்துகிடந்ததை பார்த்து உரிமையாளர் சுரேஷ்குமாருக்கு தகவலளித்தார்.