திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே வீட்டின் கதவை உடைத்து திருட முயற்சித்த திருடர்களைக் கண்டு வீட்டின் உரிமையாளர் கூச்சலிட்டதால், தப்பிச் சென்ற திருடன் தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தான். மேல்மல்லபள்ளி கொய்யா மேடு பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவரது மனைவி அனிதா வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது, முன்பக்க கதவை உடைப்பது போன்ற சத்தம் கேட்டு அவரது மாமனாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். மாமனார் வெளிய வந்து பார்த்தபோது இருவர் வீட்டின் கதவை உடைத்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த நிலையில், இருவரும் இருசக்கர வாகனத்தை விட்டுவிட்டு தப்பிச் சென்றனர்.