திருவாரூரில் ஆழித்தேர் கட்டுமான பணிகளை 36 அடி உயர தேரில் ஏறி மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். தியாகராஜர் கோவில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு, ஏப்ரல் 7-ம் தேதி ஆழித் தேரோட்டம் நடைபெறவுள்ள நிலையில், தேர் கட்டுமான பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் ஆய்வு செய்தனர்.