திருவாரூரில் தியாகராஜர் ஆழி தேரோட்டம் வெகு விமர்சையாக தொடங்கியது. பங்குனி திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆழித் தேரோட்டம் தொடங்கிய நிலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். முன்னதாக விநாயகர் மற்றும் முருகன் தேரோட்டமும் நடைபெற்றது.