திருவாரூர் ஆழித் தேருக்கான 4 குதிரை பொம்மைகள், முட்டுக்கட்டைகள், 4 வடக் கயிறுகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. திருவாரூர் தியாகராஜர் கோவிலில் பங்குனி உத்திர ஆழித் தேரோட்ட விழா, ஏப்ரல் 7-ம் தேதி நடைபெற்ற உள்ள நிலையில், தேரை அலங்கரிக்கும் பணிகளும், விநாயகர், சுப்பிரமணியர், கமலாம்பாள், சண்டிகேஸ்வரர் தேர்களையும் அலங்கரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.