தேனி மாவட்டம், ஜெயமங்கலம் வழியாக ஆண்டிப்பட்டி செல்லும் அரசுப்பேருந்துகள், பெண்களை கண்டால் பேருந்துகளை நிறுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஜெயமங்கலம் காவல்நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் பெண்கள் அதிகளவில் நிற்பதால் பேருந்து நின்று செல்வதில்லை என்றும் தாங்கள் கட்டணம் கொடுத்து செல்ல கூட தயாராக இருப்பதாகவும் வேதனையுடன் கூறுகின்றனர்.